Description
சினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ரஜத் கபூர் என பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார்கள். ஒரு பக்கம் சினிமாத் துறையில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை, அவர்களின் பாதுகாப்பின்மை குறித்த கேள்விகளை மீ டூ இயக்கம் ஒருபுறம் இயக்கியது. அதே நேரம் சமூக வலைதளங்களில் எந்த முறைமையும் இன்றி நடத்தப்படும் மீ டூ கட்டப்பஞ்சாயத்துகளின் பாதகங்கள், பாதிப்புகள் என்ன? அறம் என்ன? இந்த இயக்கம் ஆண்கள் பற்றி ஏற்படுத்தும் தட்டையான ஒருதலை பட்சமான மிகையான பிம்பம் நியாயமானதா, அது ஆண்-பெண் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தாதா, இந்த இயக்கத்தின் பின்னுள்ள ஒழுக்கவாத தொனி எங்கிருந்து வருகிறது, ஆதாரம், நிரூபணம், வழக்கு, விசாரணை எவையும் தேவையில்லாமல் ஆண்களை சிலுவையில் ஏற்றும் இந்த ஆவேசம் காட்டுவதென்ன? இக்கேள்விகளை பல கோணங்களில் துணிச்சலாய் அலசுவதே இந்நூலின் நோக்கம். மீ டூ இயக்கத்தின் போது ஊமையான பல கோடி ஆண்களுக்கு குரலைக் கொடுக்கும் முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம்.
Reviews
There are no reviews yet.