Description
தென்னிந்தியர்களின் மதியாங்களையும் இரவுகளையும் அழகிய ரதிபாவங்களாக மாற்றிய புகழ்பெற்ற நடிகை ஷகிலாவின் சுயசரிதம் இது. சினிமாவுக்கும் வாழ்க்கைக்குமிடையில் ஷகிலாவின் வாழ்க்கையின் துயரம் மிகுந்த பக்கங்கள் நம்மை சஞ்சலமடையச் செய்பவை. ஒரு பெண்ணுடலாக மட்டுமே பார்க்கப்படும் ஷகிலாவின் பிம்பத்தைக் கடந்த ஒரு துயர் மிகுந்த இதயத்தை, காமத்தின் வேட்டை நிலங்கா கடந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை இந்த நூல் பேசுகிறது. ஷகிலா தன்னுடைய வாழ்வை எந்தப் பாசாங்குமில்லாமல் தன்மேல் விழும் வெளிச்சத்திற்கு அடியில், இருக்கும் கனத்த இருளை நேரடியாக வெளிப்படுத்துகிறார் .
“என் வாழ்க்கையில் நீங்கள் அறிந்திராத சில பாகங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. 1 அதனாலேயே சிலருக்காவது எனக்குள்ளிருக்கும் பெண்ணையும் நடிகையையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கக்கூடும். கடந்துபோன வாழ்க்கையின் இனிப்பும் கசப்பும் , நிறைந்த எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்லக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதை நான் , கருதுகிறேன். இந்தப் புத்தகத்தில் என் வாழ்க்கை இருக்கிறது. என் வேதனை இருக்கிறது. என், வாழ்க்கையை என்னால் சொல்ல முடிந்த அளவு வேறு யாராலும் சொல்ல முடியாதில்லையா? சொல்லியிருக்கிற விஷயங்களோடு என்னால் இயன்ற அளவு உண்மையாக இருக்க முயற்சி செய்திருக்கிறேன்.” ஷகிலா
ஷகிலா
Reviews
There are no reviews yet.