அன்லிமிட்டெட் காலம்

அழகிய பெரியவன்

220.00

இந்த காலத்தின் சுமையைத் தோளிலும், எதிர்காலத்தின் பொறுப்பை நெஞ்சிலும் ஏற்றுக் கொண்டு காட்டாறெனக் கடக்கிறது நடப்புக் காலம். ஒன்று கண்ணில் பட்டவுடனே இன்னொன்று அதன் அருகில் வந்து, பி ன்அதுவும் காணாமல் போய் இன்னொன்று வருகிறது. இந்தச் சமகாலத்தை எழுத வேண்டுமெனில் காலத்தின் முன்னும் பின்னும் சென்று வரவேண்டும். கூர்த்தப் பார்வையும், பொறுப்புமிக்க பரிசீலனையும் தேவை. அழகிய பெரியவனின் கட்டுரைகளில் இவை அனைத்துமே இருக்கின்றன. அதிலு ம்முக்கியமாய் எங்கு நின்று பேசுவது என்ற தெளிவு இருக்கிறது. எனக்கு இந்தி தெரியாது போடா ஹேஷ்டேக் மாட்டுக்கறி பிரியாணிக்கு த்தடை, மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர், குடியிருப்பில் நுழையு ம்யானைகள் என்று பல்வேறு சமூக நடப்புகளையும், அரசியலையு மஇக்கட்டுரைகளில் விவாதிக்கும் அழகிய பெரியவன். இளையராஜாவின் இசை, இலக்கியம், திரைப்படம் என்று புனைகதைக்கும், கவிதைக்கும் உண்டான மொழியில் வாஞ்சையோடு எழுதிச் செல்கிறார். இவை ஒவ்வொன்றும் மானுட அக்கறையும் கருப்பொருள் அடர்த்தியும் கொண்ட கட்டுரைகள்:

Additional information

Weight 0.300 kg