Sale!

பித்துக் கெளுத்தி

தீபா ஸ்ரீதரன்

162.00

உயிர்மை பதிப்பக வெளியீடு : 848

ஒரு கவிஞர் தரிசிக்கும் அத்தனைக் காட்சிகளிலும், உணர்வுகளிலுமே ஒரு கவிதை விரிவதற்கான அழுத்தப் புள்ளி திணறிக்கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். என்னுடைய கவிதைகள் பெரும்பாலும் என் அகத்தில் விரிந்த பிரபஞ்சத்தின் மணமாகவே இருக்கின்றன. தன் உடல் முழுவதும் சுவை நரம்புகளைக் கொண்ட ஒரு கெளுத்தி மீனாய் என்னுள் விரிந்த சமுத்திரத்தை ரசித்துச் சுவைத்து அதில் நீந்திக் களித்துச் சிதறிய சிறு நீர்த் துளிகளைத்தான் உங்களுக்குக் கவிதையாகப் படைத்திருக்கிறேன். நீங்களும் ரசித்துக் களிக்க இதோ இந்தப் பித்துக் கெளுத்தியின் அதரக்குவியல்.

Description

தீபா ஸ்ரீதரன் 1980 ல் தூத்துக்குடியில் பிறந்தார். உயிர் தொழில்நுட்பவியல் (M.Sc. Biotechnology) பட்டம் பெற்ற இவர் தற்சமயம் தைவானில் தாய்பெய் நகரில் ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant)ராக பணி புரிந்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஜன்னல் மனம்; (சிறுகதைத் தொகுப்பு), கடல் பதிப்பக வெளியீடாக 2022ஆம் ஆண்டில் வெளிவந்தது.

‘பித்துக் கெளுத்தி’ (2024 உயிர்மை பதிப்பகம்) இவரது முதல் கவிதைத் தொகுப்பு.