Sale!

அச்சே தின் மோடியின் இந்தியா

ஆர்.அபிலாஷ்

261.00

கடந்த அரை நூற்றாண்டில் காங்கிரஸ் செய்யாத ஒன்றை பாஜக கடந்த பத்தாண்டுகளில் செய்துள்ளது: அது இந்நாட்டு மக்களின் உளவியலை,பண்பாட்டை, சிந்தனை முறையை வெகுவாக மாற்றியமைத்திருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தியாவின் தேர்தல் அரசியலை தலைகீழாக மாற்றி இருக்கிறார்கள். சமகால இந்தியாவைப் புரிந்து கொள்ள அதன் பிக்பாஸாக உள்ள மோடியையும், அவரது கருத்தியலையும் புரிந்தாக வேண்டும் எனும் கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தின் தேவைக்கு பதிலளிக்கும் முயற்சி இது. நானும் நீங்களும் நமது கருத்தியல் மாறுபாடுகளைக் கடந்து எப்படி இந்து ராஷ்டிர பிக்பாஸின் பிரதிகளாக மாறி வருகிறோம் என அலசுகிற இந்நூல் இந்துத்துவாவின் வரலாறு, மோடிஷாவின் பிரச்சாரயுக்திகள், அவர்களுடைய பொருளாதாரக் கொள்கைகள், அவர்கள் நமது நீதியுணர்வை மாற்றியமைத்துள்ள விதம்என அவர்கள் நம்மைக் கையாளும் பாங்கு என இதுவரைப் பேசப்படாத பல புதிய கோணங்களைத் திறந்து காட்டுகிறது.

Additional information

Weight .300 kg