Sale!

ஆளைப்பாரு சோளக்காட்டுல !

வா.மு.கோமு

180.00

எது எப்படியாயினும் அவள் தன் முழு உடலையும் கட்டெறும்புகளுக்குத் தின்னக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளலாகவும் இருந்தாள். கிழவியின் உடலிலிருந்து துர்நாற்றமெதுவுமில்லாமலிருந்தது. அதற்குக்காரணம் அவள் தினமும் பூஜையறையில் பற்றவைக்கும் சாம்பிராணி வில்லைகளாகவும் இருக்கலாம்தான். பதிலாக இன்னமும் வீட்டிலிருந்து விடைபெற்றுப் போகாமல் வீட்டைத்தாங்கி நின்றிருந்த தூண்களில் ஒன்றை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டிருக்கும் மரணமானது வீட்டினுள் கட்டெறும்புகளை அவ்வப்போது கொத்தி உண்டு விட்டு பரணில் பறந்தபடி ஏறிப்படுத்துறங்கும் சேவலையும் வெடையையும் பார்த்துக் கொண்டே அவையிரண்டின் பிரகாசிக்கும் அழகில் சொக்கி நின்றுவிட்டது சிலைபோல

தாய்க்கிழவி கணவனோடு வாழ்ந்த காலம் ரொம்பவுமே குறைச்சல்தான். எந்த நேரமும் கொட்டாவி விடும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தவன் வானில் நட்சத்திரங்கள் ஒன்றுகூட இல்லாத இரவொன்றில் கண்ட கனவில், முள்ளுப்பாதையில் காலில் செருப்பில்லாமல் சென்று செத்துப் போனதாய் ஊராருக்கு தாய்க்கிழவி சொல்லிக் கொண்டிருந்தாள். சாவு என்றால் நீருள்ள கிணற்றில் கல்லை உடலில் கட்டிக் கொண்டு விழுந்த சாவுதான் சாவுகளிலேயே மேன்மையானதென்றே பேசும் ஊராருக்கு தாய்க்கிழவியின் கணவனது சாவு பிடிக்கவில்லை. அவர்களது பெரிய வருத்தத்தை ஒரு பாடையிலும், அவளது கணவனை ஒரு பாடையிலும் சுடுகாடு தூக்கிப் போனவர்கள் ஒரே குழியில் அவனது பழைய துணிமணிகளோடு சேர்த்து அவர்களது வருத்தத்தையும் சேர்த்துப் புதைத்தார்கள்.

Additional information

Weight .240 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆளைப்பாரு சோளக்காட்டுல !”

Your email address will not be published.