Description
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் சிறுகதைகள் தமிழ் இலக்கிய உலகில் புனைவுசார்ந்த குவியத்தைப் பெற்றிருக்கின்றன. அவை பெரும்பாலும் தமிழ் இஸ்லாமிய சமூகம் சார்ந்த அறியப்படாத பகுதிகளுக்குள் பயணம் செய்பவை. எவரும் கவனிக்காத அந்தப் பகுதி கதைகளாக நகர்கிறது. துருக்கித்தொப்பி, மீன்காரத்தெரு, கருத்த லெப்பை வரிசையில் பஷீரிஸ்ட் ஓர் சிறந்த கதை தொகுப்பு. மொத்தம் பத்து கதைகளை இது உள்ளடக்கி இருக்கிறது. ஒவ்வொன்றுமே உள்ளார்ந்த நிலையில் அதற்கான கதை வடிவங்களோடு புனைவு வெளியில் நகர்கின்றது. கதை வெளியும் அதன் கருவும் எல்லையற்றவை. குறிப்பிட்ட வடிவ அமைப்பைத் தாண்டியவை. அது எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். குறிக்கலாம். விரிக்கலாம். கதை எப்படி புனையப்பட்டிருக்கிறது
Reviews
There are no reviews yet.