Sale!

நிம்மதியாகத் தூங்குகிறீர்களா?

சிவபாலன் இளங்கோவன்

108.00

In stock

Description

இன்றைய காலகட்டத்தில் தூக்கமின்மையும், தூக்கம் சார்ந்த நல பிரச்சினைகளும் அதிகரித்திருப்பதற்கு தூக்கத்தில் நாம் எந்த ஒழுங்கையும் கடைபிடிக்காதது தான் முக்கியமான காரணம்.

தூக்கம் தொடர்பாக நமக்குப் பல சந்தேகங்கள் இருக்கின்றன. இன்றைய நாளில் நம் எல்லோருக்குமே கூட அதில் கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும், யூ டியூப் போன்ற காணொளிகளிலும் தூக்கம் தொடர்பான மிதமிஞ்சிய தகவல்கள் இருக்கின்றன. தூக்கத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைத்து ஒருவர் இதையெல்லாம் பார்த்தால் அதற்குப் பிறகு காலத்திற்கும் அவரால் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஏனென்றால் அவ்வளவு மிகைப்படுத்தப்பட்ட, தவறான தகவல்கள் இணையத்தில் உலவுகின்றன.

இந்த அதிகப்படியான, உறுதியற்ற, கவனத்தை ஈர்க்கும் தகவல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் தூக்கம் பற்றி நாம் சில அடிப்படைகளை உள்ளது உள்ளபடியே தெரிந்து கொள்ள வேண்டும்.  தூக்கம் பற்றி எந்த மிகைப்படுத்துதலும் இல்லாத, தெளிவான, அறிவியல் பூர்வமான தகவல்களையும், எளிய விளக்கங்களையும் உங்களுக்கு தரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புத்தகத்தில் டாக்டர் சிவபாலன் விளக்கியுள்ளார்.