எப்பவுமே ராஜா

டாக்டர் ஜி. ராமானுஜம்

100.00

In stock

Description

இசையால் நமக்கு இதமளிப்பவர் இளையராஜா. பொழுதுபோக்காக மட்டுமன்றி காதல், ஆறுதல், மன அமைதி, விரக்தி, சோகம், ஆன்மீக அனுபவம்,பரவசம் , கொண்டாட்டம்,கோபம் ,ஆவேசம் எனப் பல்வேறு உணர்வுகளுக்கும் மன நிலைகளுக்கும் காரணமாகவும் வடிகாலாகவும் அமைபவை அவரது பாடல்கள்.  அவரும் அவரது பாடல்களும் அவை நமக்குத் தந்தவைகளுக்காகவே பெரிதும் கொண்டாடப்படுகின்றன. அதையும் தாண்டி பிரமிக்க வைக்கும் இசை நுணுக்கங்களாலும் பல்வேறு இசைக் கூறுகளின் பிரமாதமான கலவைகளாலும் நிறைந்தவை அவரது பாடல்கள். மேற்கத்திய  மற்றும் நம் நாட்டுச் செவ்வியல் இசை, நாட்டார் மரபிசை எனப் பல்வேறு இசைக் கூறுகளின் ஆகச்சிறந்த கலவை அவரது இசை. ஏன் அவர் இசைஞானி என்பதை அவரது புகழ்பெற்ற சில பாடல்களின் உதவியோடு விளக்கும் முயற்சி இது. அவரது பாடல்களின் நுட்பங்களைப் புரிந்து மேலும் ரசிக்கவும் கொண்டாடவும் உதவுவதே இந்நூலின் நோக்கம்.