Sale!

நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்?

ஆர்.அபிலாஷ்

58.00

In stock

Description

இந்த தேசிய கல்விக் கொள்கையின் பிரச்சனையே பிரதானமாய் இதன் அரசியல் தான்.  நாம் இவ்வளவு மூர்க்கமாய் இதை எதிர்க்கக் காரணமும் நமது அரசியல் தான். குறிப்பாய், மும்மொழிக் கொள்கை, மாநிலத்தின் கல்வி உரிமைகளைப் பறித்து, நம்மை மத்தியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களின் செயலர்களின் இமையசைவுக்கு காத்து கைகட்டி நிற்க வைக்கும் இதன் நோக்கம், தனியார் பள்ளிகளைப் பின்பற்றி சிறார்களைக் கடுமையாய் ஒடுக்குகிற தேர்வு முறைமைகளை இது கொண்டு வருவது மற்றும் பாடத்திட்டத்தினுள் தொழிற்கல்வி எனும் பெயரில் இது கொண்டு வரும் அபத்தமான மாற்றங்கள் போன்றவை, இக்கொள்கை கொண்டு வரும் சிக்கல்கள். இவை விரிவாக இந்நூலில்  அலசப்பட்டுள்ளன. இச்சிறிய நூல் இந்த மோசமான அரசியலை அலச, விவாதிக்க, அம்பலப்படுத்த எழுதப்பட்ட ஒன்று. அதே நேரம் இந்தக் கல்விக்கொள்கையின் சில சாதகமான அம்சங்களையும் குறிப்பிட வேண்டிய கடமையையும் உணர்ந்து முன்வைக்கிறது.  ஒரு திறந்த விவாதத்துக்கான அழைப்பு இது.