Description
குற்றத்தைச் செய்கிறவர்களுக்கும், அதை விசாரிப்பவர்களுக்கும் என்ன உறவு? இருவரும் ஒருவரேதானா என இந்நாவல் கேட்கிறது. பொதுவாக துப்பறியும் நாவல்களில் ஒரு நிபுணர் குற்றவாளியைக் கண்டுபிடிப்பார். யார் குற்றவாளி என்பதே கேள்வியாக இருக்கும். முடிவில் விடை இருக்கும். ஆனால் இந்நாவல் துப்பறியும் பணியை வாசகனிடமே ஒப்படைக்கிறது. வாசகன் குற்றவாளியை அல்லாது குற்ற மனிதன் விசித்திரங்களைத் தேடிக்கண்டடைகிறான். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களின் இயல்புகளை இந்நாவல் சித்தரிக்க முயல்கிறது. பல நேரங்களில் நம்முடைய குறுகிய பார்வைதான் பிறரைக் குற்றவாளி ஆக்குகிறதா? நம் நம்பிக்கைகள், ஆசைகள், விகார எண்ணங்கள் மற்றொருவரை குற்றவாளி ஆக்குவதன் மூலம் வெளிப்படுகின்றன்வோ எனவும் இந்நாவல் கேள்வி எழுப்புகிறது.
Reviews
There are no reviews yet.