வித்யா மேனனின் காதலன்
ஜி.ஆர் சுரேந்திர நாத்
₹100.00 ₹90.00
இழுத்துச் செயினை இழுத்து நுனிநாக்கில் விட்டுக்கொள்ளும் மாலதி… கழுத்தில் தண்ணீர் வழிய அண்ணாந்து நீர் அருந்தும் மாலதி… ஒற்றைக் கண்ணை சுருக்கிக்கொண்டு மாமரத்தில் கல் எறியும் மாலதி.. எக்கி எக்கி மருதாணி இலைகளைப் பதிக்கும் மாலதி… நாவல் பழம் தின்றுவிட்டு, ‘கலராயிடுச்சா?” என்று வயலட் நாக்கை நீட்டிக் காண்பித்த மாலதி… காதோர முடியை ஒதுக்கியபடி, ‘நினைவோ ஒரு பறவை…” பாடிய மாலதி…எத்தனை எத்தனை மாலதிகள்?
முதல் நாள் அறைக்கு வந்த சின்னா பேகிலிருந்து ‘சத்திய சோதனை’ புத்தகத்தை எடுத்து டேபிளில் வைத்தவுடனேயே நாங்கள் அதிர்ந்துவிட்டோம். பின்னர் ஒரு காந்தி புகைப்படத்தை எடுத்து அதை மாட்டுவதற்காக சுவரில் இடம் தேடியவன் சுவரில் ஓட்டியிருந்த நயன்தாரா போஸ்டரைப் பார்த்து, “இவங்க யாரு?” என்றவுடன் தூக்கி வாரிப்போட்டது. நான் கடுப்புடன், “ம்…. இந்திய சுதந்திரத்துக்காக போராடினவங்க… என்றேன்.
*இவ்வளவு குறைஞ்ச டிரெஸ்ஸோடவா சுதந்திரத்துக்கு போராடினாங்க?” என்று அவன் கேட்டபோதுதான் நிஜமாகத்தான் கேட்கிறான் என்று புரிந்து, “நிஜமாவே தெரியாதா?சந்திரமுகி படம் கேள்விபட்டதில்ல?”
*சந்திரமுகின்னா?” என்று சின்னா கேட்டதும், “தெய்வமே… என்று நானும், அருணும் அவன் காலில் பொத்தென்று விழுந்தோம்.
எல்லாப் பெண்களும், தங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் தங்கள் அழகின் உச்சநிலையை அடைவார்கள். சில பெண்கள் வெள்ளிக்கிழமை ஈரக்கூந்தல் நுளியை துண்டால். டப் டப்..” என்று அடித்தபடி பேசும்போது அழகின் அதிகபட்சத்தை அடைவார்கள். சிலர் ஆற்று நீரில் கொலுசணிந்த வெற்றுக்காலை மேலோட்டமாக வைத்து ஜில்லிப்பை உணர்ந்து, “ஷ்… என்று வேகமாக காலை எடுக்கும் நொடியில் தங்கள் அழகின் சிகரத்தில் ஏறுவார்கள். வேறு சிலர் மொபையில் தனது காதலனுடன் -1 டெசிபலில் கிசுகிசுப்பாக, ‘S… எருமைமாடு… என்று செல்லத்துடன் கொஞ்சும் வினாடியில் தங்கள் அழகின் உச்சத்தை அடைவார்கள்.
Reviews
There are no reviews yet.