Description
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று அதீதமாக எளிமைப்படுத்தப்பட்டதன் மூலம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள பரிணாமவியல் கோட்பாடுகளை, சிறார்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் தெளிவாகவும், தமிழில் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. நாம் வாழவும், நாம் பாதுகாக்கவும் இருக்கக்கூடிய இந்தப் புவியில் உயிரினங்களின் தோற்றம் பற்றிய வரலாற்றை அறிவியலின் துணையோடு, ஆய்வுக்கட்டுரைகளின் பின்னணியில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடுகள் அறிவியல் உலகையே புரட்டிப் போட்டவை. உயிரினங்களின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை மேலும் விளக்குவதற்கு இயற்கைத் தெரிவு, தக்கன தழைத்தல், சந்ததிகளை நீட்டித்தல் ஆகியனவற்றை ஆய்வின் அடிப்படையில், சமகால எடுத்துக்காட்டுகளுடன் இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது.
Reviews
There are no reviews yet.