தமிழ்க் கூலி
இந்திரஜித்
₹160.00 ₹144.00
இரண்டாம் உலகப் போர் தென்கிழக்காசியாவில் வசித்த தமிழர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 80 ஆயிரம் தமிழர்கள் செத்துப் போனார்கள். மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் குடும்பங்களைப் பறிகொடுத்து அநாதைகளாக அலைந்து திரிந்தார்கள். அந்தக் கதையைச் சொல்கிறது தமிழ்க் கூலி, யார் தமிழ்க் கூலி?
தமிழ்க் கூலி என்பவன் ஒரு மடையன் என்று சில மடையர்கள் நினைக்கிறார்கள். அது சரிதானா? தமிழ்க் கூலியின் எதிரி யார்? வெள்ளையனா? ஜப்பானியனா? காட்டிக் கொடுத்த மற்றவனா? சில இடங்களில் ஒரு கதையாக, சில இடங்களில் ஒரு சொல் அல்லது ஒரு வாக்கியத்தில் புதைகிறது இருநூறு ஆண்டு வெளிநாட்டுத் தமிழ் வாழ்க்கையின் ஒரு கீற்று. தமிழ்க் கூலியின் சராசரி வயது 18. தொப்பை இருக்காது. ஒல்லியாக இருப்பான். அவன் புத்திசாலி. அவனை உங்களுக்குக் கூலியாக அறிமுகப்படுத்துவது எது? அது இப்போதும் இங்குதான் இருக்கிறதா?
Reviews
There are no reviews yet.