Description
மனிதன் அறியத் துடிக்கும் பல புதிர்களில் மனமும் ஒன்று. மனதின் இருப்பிடம் எது, அதன் செயல்படுவது எப்படி, எண்ணங்கள் எங்கு தோன்றுகின்றன, உணர்ச்சிகள் ஏன் எப்படி உருவாகின்றன, அவற்றைக் கட்டுப்படுத்துது எப்படி, மொழியறிவு எப்படி உருவாகிறது, நினைவுகள் எவ்விதம் எங்கே உருவாகின்றன, அவற்றுக்கும் உணர்ச்சிகளுக்கும் என்ன தொடர்பு, மனிதன் ஏன் கலையில் ஈடுபடுகிறான், நான் என்ற உணர்வை எப்படி விளக்குவது -இது போன்ற கேள்விகள் காலாகாலமாக இருந்து வருபவை. மத அறிஞர்களும் தத்துவ ஞானிகளும் இவற்றுக்கு விடை தந்து வந்திருக்கின்றனர். ஆனால் அது முழுமையானது அல்ல. மூளை அறிவியலில் ஏற்பட்டு வந்திருக்கும் பல்வேறு முன்னேற்றங்களால் இவற்றுக்கெல்லாம் அறிவியல் பூர்வமாக விடைகள் வரத் தொடங்கி இருக்கின்றன. இவற்றைப் பற்றிய ஓர் அடிப்படைப் புரிதலை ஏற்படுத்துவதே இந்த நூலின் நோக்கம். உயிர்மை மாத இதழில் தொடராக வந்த இக்கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் மனித மனம் தொடர்பாகக் கோட்பாடுகள் மற்றும் தத்துவ ரீதியாகவே அலசப் பட்ட விஷயங்கள் அறிவியல் ரீதியாக விளக்கப்பட்டிருக்கின்றன.
Reviews
There are no reviews yet.