பக்கார்டி
அரிசங்கர்
₹160.00 ₹144.00
“எதுனா சரக்கு வெச்சிக்கிற” என்றார். பக்கார்டி தனது பையினுள் கையை விட்டுப் பாதி நிரம்பியிருந்தக் குவாட்டர் பாட்டிலை எடுத்து நீட்டினார். அதை எக்கி வாங்கிக்கொண்டவர் அதை அப்படியே வாயில் சரித்துக்கொண்டு விழுங்கித் தலையை ஒரு ஆட்டு ஆட்டினார். இரண்டு முறை நன்றாக இருமிவிட்டு தொண்டையை செருமிக்கொண்டார். திரும்ப பாட்டிலைக் கொடுத்தார். அதை வாங்கிப் பத்திரப்படுத்திகொண்டார் பக்கார்டி. இருவரும் சிறிது நேரம் அப்படியே அமைதியாக இருந்தனர். ஏதோ சத்தம் கேட்டு நாய்கள் எழுந்து ஓடின. அவர் மெல்ல அழ ஆரம்பித்தார். பிறகு, அவரே கண்களைத் துடைத்துகொண்டு, “செரி யேசு, நீ தூங்கு. நான் போறேன்” என்று சொல்லிவிட்டு வண்டியைத் திருப்பிக்கொண்டு இடத்தைவிட்டு நகர்ந்தார். பக்கார்டி என்கிற யேசுதாஸ் என்கிற யேசு தனது பையைத் தலைக்கு வைத்துகொண்டு படுத்து வானத்தைப் பார்த்தார். தூரத்திலிருந்த ஒரு நட்சத்திரம் இவரை நோக்கி இறங்கி வந்துகொண்டிருந்தது.
– புத்தகத்திலிருந்து…
Reviews
There are no reviews yet.