Description
துன்யாஸாத்: ”இரவுப் பொழுதை இன்பமாகக் களிப்பதற்கு உனக்குத் தெரிந்த கதைகளில் ஒன்றைச் சொல்…”
ஷராஸத் : ”ம், மிச்சக் கதையை நான் சொல்லி முடிக்க வேண்டுமென்றால், என்னை மன்னர் நாளை உயிரோடு விட்டிருக்க வேண்டும்.”
பெண்கள் மேல் கடும் வெறுப்புக் கொண்டு பூமியிலிருந்து ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழித்துக் கொண்டிருக்கும் மன்னர் ஷராயர் ஒருபக்கம். வாழ்வின் மீது அன்பு ததும்பிக் கொண்டிருக்கும் கதைசொல்லியான ஷராஸத் மறுபக்கம்.
இருவருக்குமான இடைவெளியை இணைக்குமா அவள் சொல்லும் கதைகள்? மன்னரின் கண்கட்டு கதைகளால் அவிழுமா?
Reviews
There are no reviews yet.