Description
சென்னை நகரம் நானூறு ஆண்டு வரலாறு கொண்டது. ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் சென்னையில் நடந்த மாற்றங்கள் மகத்தானவை. நகரத்தின் முகம் நாகரிகமாக மாறியதும் இந்த பொன் விழா காலங்களில்தான். சாலைகளின் நடுவே பாலங்கள் உருவாகின, மின்சார ரயில்கள் நகரத்தை வளர்த்தன, டி.வி. வந்தது, செல்போன் வந்தது… சினிமாவில் நல்ல தமிழ் வந்தது எல்லாம் நிகழ்ந்தன. சாமானியர்களும் கல்லூரி படிப்பை எட்டினர். ஆட்சி மாற்றம் ஒரு சமூக மாற்றமாகவும் இருந்தது. மூர்மார்க்கெட், அதனருகே இருந்த மிருகக் காட்சிசாலை எல்லாம் கண்முன்னாலே காணாமல் போயின. ட்ராம் வண்டி நிலையம் பெரியார் திடலாகவும் தினந்தந்தி அலுவலகமாகவும் மாறியது. இந்த மாற்றங்களினூடாக சென்னையின் பல்வேறு முகங்களை இந்த நூல் பேசுகிறது.
Reviews
There are no reviews yet.