Sale!

நூறு ரூபிள்கள்

மயிலன் ஜி சின்னப்பன்

144.00

In stock

Description

வண்ணநிலவன் ‘வார்த்தை’ என்று ஒரு கதை எழுதியிருப்பார். பைபிளின் அல்லது ஏசுவின் ஒரு முக்கிய தருணத்தில் பிலாத்து உச்சரிக்க வேண்டிய சொல்லின் கதை அது. ‘நூறு ரூபிள்க’ளின் மொழி அப்படி ஒரு வசீகரம் உடையது. அது புத்துயிர்ப்பின் உடல்மொழி. காத்ரீனா மிக்கய்லொவ்னா மாஸ்லோவாவும் திமித்ரி இவனோவிச்சும் தல்ஸ்தோய் தைத்த கச்சிதமான ஆயத்த ஆடையில் நடமாடுகிறார்கள்.

எனக்கு, இது ‘புத்துயிர்ப்பு’டன் பொருந்துகிற ஒரு முக்கியமான தருணம். புத்துயிர்ப்பு எனக்கு மட்டும் அல்ல. நவீன தமிழ்ச் சிறுகதைக்கும்.

-வண்ணதாசன்