Description
அடிப்படைவாதம் நம் காலத்தின் வாழ்க்கை முறையாக மாறிவருகிறது. அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மனித உரிமைகலுக்கான , ஜனநாயக உரிமைகளுக்கான பெண் உரிமைகளுக்காக, சமூக நீதிக்கான போராட்டமாக இன்று வெளிப்படுகிறது.மத அடிப்படைவாத இயக்கங்கள் ஒருபுறம் அரசியல் அதிகாரத்தை நோக்கி முன்னேறுகின்றன. இன்னொரு புறம் தமது பண்பாடு அதிகாரத்தை கெட்டிப்படுத்திக்கொள்கின்றன. இதற்கு எந்த ஒரு மதமும் விலக்கல்ல.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மீது ஆழமான கேள்விகளை எழுப்பும் எச்.பீர்முஹம்மதின் குரல் தனித்துவமானது. ஜனநாயகத்தின் பாற்பட்டது. உலகளாவிய நவீன, பின் நவீனத்துவ சிந்தனை மரபுகளின் செறிவு கொண்டது. அந்த வகையில் இந்த நூல் நம்மை பல புதிய உரையாடல்களுக்கு இட்டுச் செல்கிறது.
Reviews
There are no reviews yet.