Description
பூமியில் மனித இருப்புக் குறித்துக் காலங்காலமாக உருவாக்கப்பட்டிருக்கிற நம்பிக்கைகளும் விழுமியங்களும் இன்று அர்த்தம் இழந்துள்ளன. எதுவும் நடப்பதற்கான சாத்தியப்படுகள் ததும்பிடும் அரசியல் சூழலில் அசலான மதிப்பீடுகள் அபத்தமாகியுள்ள்ளன. ஒவ்வொருவருக்கும் பதிலாகத் தொலைக்காட்சி ஊடகங்கள் சிந்தித்து, கார்ப்பரேட்டுகளின் பொதுநலனுக்கான உடல்களை நகலெடுத்துக் கொண்டிருக்கின்றன. இருப்பின்மீது நம்பிக்கையை ஏற்படுத்திட முயன்ற மதங்கள், மனித உடல்களைத் தொடர்ந்து வதைக்குள்ளாக்குக்கின்றன. கலை, இலக்கியப் படைப்புகள்மூலம் மனிதர்கள் காலந்தோறும் உருவாக்கிய பண்பாடு, மரபுகள் ஆண்டிராய்டு அலைபேசியின் தொடுதிரையில் காணாமல் போய்விட்டனவா? யோசிக்கும் வேளையில் என்ன மாதிரியான காலகட்டத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வி தோன்றுகிறது. சமூக, அரசியல், பண்பாடு குறித்த காத்திரமான கட்டுரைகள் மூலம் ந.முருகேசபாண்டியன் எழுப்பியுள்ள கேள்விகள், சமகாலத்தின் குரலாகும்.
Reviews
There are no reviews yet.