Description
பெருந்தேவியின் கவிதைகள் பின்நவீனத்துவ இலக்கிய உலகின் துல்லியமான, அசலான குரல் என்று சொல்வதற்கான முழுமையான நியாயத்தை இத்தொகுப்பு வழங்குகிறது. மனித மனம் சிறு சிறு துண்டுகளாகச் சிதறும் காலத்தில் அந்தச் சில்லுகளினூடே ஆழமான மானுட மெய்மைகளை இக்கவிதைகள் கண்டடைய முற்படுகின்றன. கொரோனா காலத்தின் கொடுங்கனவுகளை பெருந்தேவி ஒரு பிரமாண்டமான கேன்வாசில் தீட்டுகிறார். நம்முடைய காலத்தின் அபத்த நிலைகளை அதனுடைய உலர்ந்த மொழியிலேயே எழுதிச் செல்வதன்மூலம் பல கவிதைகளில் எதிர்கவிதை மொழியினைக் கட்டமைக்கிறார். நவீன தமிழ்க் கவிதை மொழிக்கு பெருந்தேவி இத்தொகுப்பின் மூலம் புதிய வெளிச்சங்களைத் தந்து பங்களிப்புச் செய்கிறார்.
Reviews
There are no reviews yet.