Sale!

டாக்டர் ஜி. ராமானுஜத்தின் இரு புதிய நூல்கள்

டாக்டர் ஜி. ராமானுஜம்

156.00

1. இசைபட வாழ்தல்

2. எப்பவுமே ராஜா

Out of stock

Description

1. இசைபட வாழ்தல்

திரைப்படப் பாடல்கள் நமது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சங்க காலத்திலிருந்து நீண்ட நெடிய இசை மரபும் மிகச்சிறந்த இசை ரசனையையும் திறமைகளையும் உடைய நம் மண்ணில் அதன் நீட்சியாக அமைந்துள்ளன திரைப்பாடல்கள். பல்லாயிரக்கணக்கான பாடல்களை ரசிக்கின்றோம். ஆயினும் அந்த திரைப்பாடல்களில் இருக்கும் இசை நுட்பங்களைப் பலர் அறிந்து கொள்வதில்லை. குறிப்பாக நமது செவ்வியல் இசையின் கூறுகளான ராகம் தாளம் போன்றவை எப்படியெல்லாம் திரைப்பாடல்களில் அமைந்திருக்கின்றன என்பதை அலசுகின்றன இந்த நூல் . எளிய இசை ரசிகனுக்கும் இசை  பற்றிய நுணுக்கங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை அளித்துத் திரைப்பாடல்களை மேலும் ரசிக்க உதவ வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.  நாளிதழில் தொடராக வரும்போதே கவனத்தை வெகுவாக ஈர்த்தன இக்கட்டுரைகள்.

2. எப்பவுமே ராஜா

இசையால் நமக்கு இதமளிப்பவர் இளையராஜா. பொழுதுபோக்காக மட்டுமன்றி காதல், ஆறுதல், மன அமைதி, விரக்தி, சோகம், ஆன்மீக அனுபவம்,பரவசம் , கொண்டாட்டம்,கோபம் ,ஆவேசம் எனப் பல்வேறு உணர்வுகளுக்கும் மன நிலைகளுக்கும் காரணமாகவும் வடிகாலாகவும் அமைபவை அவரது பாடல்கள்.  அவரும் அவரது பாடல்களும் அவை நமக்குத் தந்தவைகளுக்காகவே பெரிதும் கொண்டாடப்படுகின்றன. அதையும் தாண்டி பிரமிக்க வைக்கும் இசை நுணுக்கங்களாலும் பல்வேறு இசைக் கூறுகளின் பிரமாதமான கலவைகளாலும் நிறைந்தவை அவரது பாடல்கள். மேற்கத்திய  மற்றும் நம் நாட்டுச் செவ்வியல் இசை, நாட்டார் மரபிசை எனப் பல்வேறு இசைக் கூறுகளின் ஆகச்சிறந்த கலவை அவரது இசை. ஏன் அவர் இசைஞானி என்பதை அவரது புகழ்பெற்ற சில பாடல்களின் உதவியோடு விளக்கும் முயற்சி இது. அவரது பாடல்களின் நுட்பங்களைப் புரிந்து மேலும் ரசிக்கவும் கொண்டாடவும் உதவுவதே இந்நூலின் நோக்கம்.