Description
மாறும்பருவங்களின் மத்தியில் நிகழ்ந்தவண்ணமாயிருக்கும் நுண்மாற்றங்களைப் போல், அகமய்யத்திற்கும் x புறமய்யத்திற்கும் இடையே ஊடாடுபவை கனிமொழி.ஜி இன் கவிதைப் பிரதிகள். தன்னிழப்பின் கணங்களையும் அதிலிருந்து மீண்டெழும் தருணங்களையும் மொழியின் அடுக்குகளில் படியச் செய்பவை இவரது கவிதைகள். படிமங்களுக்குள் உறைந்துவிடாத அடுக்கடுக்கான இயற்கையின் காட்சியுணர்வுகள் வாசகனைத் தன் கவித்துவத் துடிப்புடன் இரண்டறக் கலக்கச் செய்கின்றன, கவிதைச்சொல்லியின் குரலும் / வாசகனின் மனோவியமும் இணையும் புள்ளிகள் நிறைந்துள்ளன இக்கவிதைகளில்; ஒரே கவிதையில் படிமங்களைக் கட்டமைப்பதும் அதே கவிதையில் அதை அவிழ்ப்பதுமான கவித்துத் தொழில்நுட்பத்தை கனிமொழி.ஜி கையாளுகிறார். கவிஞரின் மனோவெளியின் எல்லையும் x வாசகனின் வாசிப்பில் உருக்கொள்ளும் மனோவெளியின் எல்லையும் அழிக்கப்பட்டு பிரதியின் பொருண்மையைத் தொடர்ச்சியான பரவலில் இயக்குகின்றன.
Reviews
There are no reviews yet.