Description
சாலையோரம் உதிர்ந்து கிடக்கும் மல்லிகைபூவும், இரவு படுக்கையில் உதிரும் மல்லிகைபூவும் ஒரே பூவா என்ன? கம்ப்யூட்டரில் பணிபுரியும் இளம்பெண் முகமும், கார்த்திகை தீபமேற்றும்போது ஒளிரும் இளம்பெண் முகமும் ஒரே முகமா என்ன? வெள்ளைக் கோல வாசலும், வண்ணக் கோல வாசலும் ஒரே வாசலா என்ன? மாமியாருடன் பேசும் பெண் முகமும், குழந்தையைக் கொஞ்சும் பெண் முகமும் ஒரே முகமா என்ன?
காதல் நம்மை தழுவும் போது வாழ்க்கை படுக்கையில் உதிரும் மல்லிகையாகிறது. தீபச்சுடரில் பிரகாசிக்கும் இளம்பெண் முகமாகிறது. வண்ணக் கோல வாசலாகிறது. குழந்தையைக் கொஞ்சும் பெண் முகமாகிறது. ஆயிரம் சிறகுள்ள கனவு போன்ற நாவலாகிறது.
குடும்ப உறவுகளின் சிக்கல்களில் சிதைந்து மீண்டெழும் ஒரு கொண்டாட்டமான காதல் கதையை சுரேந்தர்நாத் தனக்கே உரிய தனித்துவமான காதல் மொழியும், நகைச்சுவையும் கலந்த நடையில் முற்றிலும் புதிய பின்புலத்தில் எழுதியிருக்கிறார். பரபரப்பான புதிய சம்பவங்கள்… புன்னகை சிந்த வைக்கும் காதல் உரையாடல்கள்…வாய்விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை…. இயல்பான அதிரடி திருப்பங்கள்…கண்ணீர்… என்று ஒரு தரமான பொழுதுபோக்குத் திரைப்படத்தை பார்த்த உணர்வை அளிக்கிறது இந்நாவல்.
நிறைவான வாசிப்பு சுவாரஸ்யத்தை அளிக்கும், விறுவிறுப்பான ஜனரஞ்சக எழுத்தாக விரிந்திருக்கும் இந்நாவல் முற்றிலும் புதிய ஒரு காதல் உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
Reviews
There are no reviews yet.