Description
பிழைத்திருப்பது ஒரு மிகப்பெரிய பரிணாம சவால்.
ஆபத்துகளை உணர்ந்து கொள்வது, அதில் இருந்து விலகி ஓடுவது அல்லது ஆபத்தை எதிர்கொண்டு அழிப்பதே பிழைப்பதற்கான வழி. அதனால் பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு (survival instinct) மனிதனின் மரபணுவில் எப்போதும் இருக்கிறது.
இன்று நாகரீக மனிதன், காடுகளிலிருந்து நிலங்களுக்குப் புலம்பெயர்ந்து விட்டான். கொடிய விலங்குகளால் இன்று அவனுக்கு ஆபத்து இல்லை, அவைகளில் இருந்து தப்பிப்பதும், பிழைப்பதும் கூட அவனுக்கு முதன்மையானதாக இல்லை. ஒரு சமூக விலங்காகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதும், தனது சந்ததியின் நீட்சியை உறுதி செய்வதும்தான் அவனுக்கு இன்று தலையாய பிரச்சினை. அதனால் ஆபத்து என்பது கொடூரமான விலங்குகளால் இல்லை. மாறாக, அவன் சார்ந்திருக்கும் சமூகமே அவனுக்கு ஆபத்தானதாக இருக்கிறது, அன்றாட வாழ்க்கையில் அவன் அது போன்ற பல ஆபத்துகளை கடந்து வரவேண்டியிருக்கிறது. அவனது பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு (survival instinct) என்பது அன்றாட வாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளும் இது போன்ற ஆபத்துகளால் இன்றும் தூண்டப்படுகிறது. அதனால் மனிதன் இன்றும் பயப்படுகிறான், பதட்டமடைகிறான்.
Reviews
There are no reviews yet.