
சுஜாதா
1935ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு பொறியியல் பட்டதாரி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளங்கலைப் படிப்புக்குப் பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மின்ன ணுவியல் படித்தவர். மத்திய அரசு விமானப் போக்குவரத்து இலாகாவிலும் பங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத் திலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர். ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’ என்னும் மைய அரசு நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் பொதுமேலாளராக ஓய்வு பெற்ற பிறகும் இரண்டு நிறுவனங்களில் ஆலோசகராக பணி புரிந்தார். அம்பலம் என்னும் இணைய இதழுக்குப் பொறுப்பாசிரியராக தனது இறுதிக் காலம் வரை பணிபுரிந்தார்.
தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இவரது முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். 1993இல் மைய அரசின் அறிவியல், தொழில்நுட்ப விருதான NCTC விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையை பரப்பியதற்காக சுஜாதாவிற்கு அளிக்கப்பட்டது.
தனது மகத்தான படைப்பாற்றலால் 50 ஆண்டு காலம் தமிழ் வாசக பரப்பை ஆக்ரமித்திருந்த சுஜாதா 27.02.2008ல் சென்னையில் மறைந்தார்.
அவரது மனைவி சுஜாதா ரங்கராஜன்.
மகன்கள்: ரங்க பிரசாத், கேசவ பிரசாத்.
Showing 1–24 of 50 results
-
COMMENTARIES ON SANGAM LITERATURE BY SUJATHA – SPECIAL OFFER
₹1,300.00 Add to cart -
Sujatha’s Selected Short Stories Anthology 3 Volume – Special Offer
₹1,710.00 Add to cart -
Sujatha’s Short Novels Anthology – 5 volume – Special Offer
₹2,560.00 Add to cart -
சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (மூன்றாம் தொகுதி)
₹490.00 Add to cart
Showing 1–24 of 50 results