Description
மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் ‘பிரிவின் பாதையில் விளக்குகள் இல்லை’ என்பதை நமக்கு உரக்கச் சொல்கிறது. மழையில் நனையும் பிசாசுகளையும் நினைவின் கடல்களில் நீந்தும் கடற்கன்னிகளையும் படிமமாக்குகிறது. மிருதுவான ஒரு கரம்பட்டு உயிர்த்தெழும் ஞாயிற்றுக்கிழமையில் இளைப்பாறுகிறது.
அதே சமயம் பல்வேறு சமூக நிகழ்வுகளை ஊடுருவிச் செல்லும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். கூமாப்பட்டி முதல் காசா போர், அகமதாபாத் விமான விபத்து, கோயில் காவலாளி அஜித்குமார் மரணம், ஆணவக்கொலை, கோவையில் திருமணமான ஒரு பெண்ணின் தற்கொலை சமூக வலைத்தளங்களில் வைரலான விதம், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் முல்டர் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அடித்த 367 ரன்கள், மறைந்த நடிகர் மதன் பாப்பின் சிரிப்பு என அவரை பாதித்த அனைத்தையும் இங்கே கவிதையாக்கி இருக்கிறார்.








Reviews
There are no reviews yet.