Description
‘ஜென் Z’ இளைஞர்களின் புதிய வாழ்க்கை முறைகளை, மாறிவரும் அவர்களது மதிப்பீடுகளை
எதிர்மறையாகப் பார்த்து அதை நிராகரிக்கும் போக்கை முந்தைய தலைமுறையினரிடம்
பார்க்க முடிகிறது.
மனித வரலாற்றில் இதுவரை எந்தத் தலைமுறையும் சந்திக்காத அளவுக்கு வேகமாக
மாறிக்கொண்டிருக்கும் உலகில் அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம்
பார்க்கும்போது அவர்கள் மரபுகளை மீறுபவர்களாகத் தெரிகிறார்கள். ஆனால் உண்மையில்
அவர்கள், பழைய உலகத்தின் விதிகளால் புதிய உலகத்தை வாழ முடியாது என்று
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் பார்க்கும்போது அவர்கள் பொறுமையற்றவர்களாகத் தெரிகிறார்கள். ஆனால் அவர்கள்
வாழும் உலகமே, முந்தைய எந்த உலகத்தையும் விட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் புத்தகம் அந்தத் தலைமுறையைப் பற்றியது. அவர்களுடைய குறைகளைப் பற்றி
மட்டும் அல்ல, அவர்களுடைய வலிமைகள், குழப்பங்கள், புதிய மதிப்பீடுகள், மனநலன்,
காதல், நட்பு, அரசியல், வேலை, குடும்பம், எதிர்காலம் என அனைத்தை பற்றியது.









Reviews
There are no reviews yet.