Sujatha’s Selected Short Stories Anthology 3 Volume – Special Offer

சுஜாதா

1,710.00

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (மூன்றாம் தொகுதி)

 

Description

சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)

சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. வெளிவந்த காலத்தில் வாசகர்களிடம் ஆழ்ந்த சலனங்களை உருவாக்கிய ‘நகரம்’, ‘பார்வை’, ‘ரேணுகா’, ‘எல்டொராடோ’, ‘கால்கள்’, ‘தீவுகள் கரையேறுகின்றன’ உள்ளிட்ட பல முக்கியக் கதைகள் அடங்கியது இத்தொகுப்பு. வாழ்வின் சில ஆதார குணங்களையும் அபத்தங்களையும் மிக நெருக்கமாகத் தொட்டுச் செல்லும் இக்கதைகள் காலமாற்றத்தால் புதுமை குன்றாதவை.

சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)
சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் தனித்துவமுள்ளதாக்குகின்றன. மனித மனதின் இருள்வெளிகள், தனிமைகள், அவமானங்கள், சிறுமைகள், வினோதங்கள், சமூகச் சீரழிவுகள் எனப் பல்வேறு தளங்களில் இக்கதைகள் சஞ்சரிக்கின்றன. எழுதப்பட்ட காலத்திலிருந்து சுஜாதாவின் வாசகர்களின் நினைவுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ‘பாலம்’, ‘குதிரை’ ‘ஒரு இலட்சம் புத்தகங்கள்’, ‘இரு கடிதங்கள்’, ‘தனிமை கொண்டு’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (மூன்றாம் தொகுதி)

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் வேறு சில கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சமகால மத்தியதர வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் இக்கதைகளில் சில அவை வெளிவந்த காலத்தில் சர்ச்சைகளை உருவாக்கின. அபூர்வமான கதைசொல்லும் முறை. மின்னலைப்போல் வெட்டிச் செல்லும் நடை, அசலான மனிதர்களை மறுபடைப்புச் செய்யும் நுட்பம் ஆகியவற்றால் இக்கதைகள் தமிழ்ச் சிறுகதை மொழிக்கு பெரிதும் வளம் சேர்த்தவை.

Additional information

Weight 2000 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sujatha’s Selected Short Stories Anthology 3 Volume – Special Offer”

Your email address will not be published. Required fields are marked *