Description
சுஜாதா மர்மக் கதைகள்
சுஜாதாவின் சிறுகதைகளில் குற்றத்தையும் மர்மத்தையும் பின்புலமாகக் கொண்டு எழுதிய அனைத்துக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை வெறுமனே வாசக சுவாரசியத்திற்காக எழுதப்பட்ட திகில் கதைகள் அல்ல. மனித அந்தரங்கத்தின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் குற்றத்திற்கான தீராத வேட்கையை இக்கதைகள் பேசுகின்றன. முன் தீர்மானிக்க முடியாத மர்மத்தின் ரகசிய வழிகளைத் தனது சாகச நடையில் சுஜாதா தொடர்ந்து உருவாக்குகிறார்.
ஸ்ரீரங்கத்துக் கதைகள்
ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண்டு உலகங்களுக்கிடையே அலைக்கழியும் ஒரு வாழ்க்கை முறையினை விவரிக்கும் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சுஜாதாவின் துல்லியமான சித்தரிப்பு முறையினால் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் உயிர்பெற்று எழச் செய்கின்றன.
விஞ்ஞானச் சிறுகதைகள்
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திருக்கும் விஞ்ஞானச் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு முதன் முதலாக வெளிவருகிறது. தமிழில் விஞ்ஞானக் கதைகளின் முன்னோடியான சுஜாதாவின் இப்படைப்புகளில் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிவியலும் புனைவும் யதார்த்தமும் கனவும் கலந்து மயங்குகின்றன. கால மாற்றத்தால் புதுமை குன்றாத இக்கதைகள் வாசகர்களின் மனதில் தீராத வினோதங்களைப் படைக்கின்றன.
Reviews
There are no reviews yet.