Description
சுஜாதாவின் குறுநாவல்கள் (முதல் தொகுதி)
இந்த முதல் தொகுதியில் இடம்பெறும் குறுநாவல்களில் பெரும்பாலானவை குற்றம், பிறழ்வு, மனித நடத்தையின் விசித்திரத்தோடு தொடர்புடையவை. அவை குற்றங்களின் மனோரீதியான ஊற்றுகளைத் தேடிச் செல்பவை. மனிதர்களின் பிறழ்வுகளை அவர்களின் அந்தரங்க மற்றும் சமூக வாழ்வின் பின்புலத்தில் வைத்துப் பார்க்க முயல்பவை.
சுஜாதாவின் குறுநாவல்கள் (இரண்டாம் தொகுதி)
சுஜாதா குறுநாவல்கள் இரண்டாம் தொகுதியில் முதல் தொகுதியைப் போலவே பத்துக் குறுநாவல்கள் இடம்பெறுகின்றன. பெருநகர் சார்ந்த மனோபாவங்களையும் நெருக்கடிகளையும் ஒரு வலைப்பின்னல் போன்ற கதையமைப்பினால் எழுதிச் செல்லும் சுஜாதாவின் இந்தக் குறுநாவல்களில் பல அவை வெளிவந்த காலத்திலிருந்து தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருபவை.
சுஜாதாவின் குறுநாவல்கள் (மூன்றாம் தொகுதி)
சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொகுதிகளாக கடந்த ஆண்டு பதிப்பித்தது. அந்த வரிசையில் அவரது குறுநாவல்களின் மூன்றாவது தொகுதி இது. இந்தத் தொகுதியில் கணேஷ் – வசந்த் இடம்பெறும் குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் துப்பறியும் கதைகள் அல்லது குற்றம் சார்ந்த கதைகளின் இயல்பில் பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்தவர் சுஜாதா. குற்றங்களின் உளவியல் ரீதியான பின்புலங்கள் தர்க்க ரீதியான, அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த அணுகுமுறை ஆகியவை அவரது துப்பறியும் கதைகளை தனித்துவம் உள்ளதாக்குகின்றன. அந்தக் குற்றக்கதைகளில் இடம் பெறும் துல்லியமான பின்புலம் சார்ந்த விவரணைகளும் பாத்திர உருவாக்கமும் சம்பவங்களின் யூகிக்க முடியாத நூதனமான திருப்பங்களும் இந்தக் கதைகளை மர்மக்கதைகள் என்கிற எல்லையைத் தாண்டி முக்கியத்துவம் பெறச்செய்கின்றன.
சுஜாதாவின் குறுநாவல்கள் (நான்காம் தொகுதி)
சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை.
சுஜாதாவின் குறுநாவல்கள் (ஐந்தாம் தொகுதி)
சுஜாதாவின் எழுத்துகள் அவற்றின் அபூர்வமான கதைக்களன்களுக்காகவும் வாசகனை ஒரு மாயச்சுழலுக்குள் இழுத்துச் செல்லும் வசீகரமான நடைக்காகவும் காலத்தைத் தாண்டியும் தொடர்ந்து புதிய வாசகர்களை உருவாக்கியவண்ணம் இருக்கிறது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சுஜாதாவின் ஏழு குறுநாவல்கள் வெவ்வேறு தளங்களில் சஞ்சரிப்பவை. வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களையும் மனித மனதின் விசித்திரங்களையும் மிக நுட்பமாகத் தொட்டுச் செல்பவை.
Reviews
There are no reviews yet.