எக்ஸ்டஸி
₹350.00
புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. சர்வ சாதாரணமாகக் கடந்துபோகும், பார்வைக்கே வராத விஷயங்களைக் காட்சிப்படுத்தும் இந்தத் தொகுப்பு அடர்த்தியான கேள்விகளை முன்னிறுத்துகிறது. எளிய விஷயங்கள் இவை எனக் கடந்து போயிருக்கலாம் இதுவரை. ஆனால் அவற்றிற்குப் புதிய அர்த்தங்களை வரைந்து காட்டுகிறது இந்தப் புத்தகம்.
அறிவுரை சொல்லும் தொனியை முற்றாக ஒதுக்கி தோளில் கைபோட்டு உரையாடும் ஒரு தோழனைப் போல, தமிழ் நிலத்தின் பல்வேறு சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்க முயல்கிறார் சரவணன் சந்திரன்.
காட்சி ஊடகங்களின் கதை சொல்லும் உத்தியைக் கட்டுரைகளுக்குப் புகுத்தியிருப்பதன் வழியாகப் புதிய வாசல்களைத் திறந்துவைத்து எல்லா வகை பருவக் காற்றுகளும் உட்புகுந்து வெளியேற வழியமைத்துக்கொடுத்த வகையில் குறிப்பிடத்தகுந்த தொகுப்பு.








Reviews
There are no reviews yet.