Description
மனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை, துரோகத்தை, வன்மத்தை எழுதுவது ஒரு சிலந்தி வலையைப் பிரிப்பது போன்றது. இந்த சவாலை இக்கவிதைகள் வெகு நுட்பமாகவும் நேர்த்தியாகவும் எதிர்கொள்கின்றன. எந்த நேரமும் துளிர்க்கக் காத்திருக்கும் கண்ணீர் துளியின் ததும்பலிலிருந்து எக்கணமும் உருவப்பட காத்திருக்கும் கொலைவாளின் மௌனத்திலிருந்தும் ஒரு சிறிய முத்தத்தில் நீளும் பெரும் யுகத்திலிருந்தும் இக்கவிதைகள் பேசுகின்றன
Reviews
There are no reviews yet.