Description
தரையிலிருந்து மேலெழும்பிப் பறக்கும் பருந்தின் பார்வையில், பல்வேறு நிலப்பரப்புகளில் சிதறிக் கிடக்கும் கதைகளைக் கொத்திக் கடக்க முனையும் கட்டுரைத் தொகுப்பிது. ஏராளமான தகவல்களின் வழியாக நாம் பார்க்காத இன்னொரு சித்திரத்தை வரைந்து காட்டுகிறது இது. அத்தனை நிறங்களையும் உள்ளடக்கிய மனிதர்கள், பிற உயிர்களுக்கு இணையாக இத்தொகுப்பில் சுதந்திரமாக ஊடாடுகிறார்கள். நம்மை மூர்க்கமாக நெருக்கும் அன்றாடச் சிக்கல்களின் முதுகில் கேள்விகளை வரைந்து பதில் தேட முனைகிறது. ஒரு பத்திரிகையாளனும் புனைவெழுத்தாளனும் சந்திக்கும் புள்ளியில் நின்று அத்தனை கோணங்களிலும் சுழன்றடித்துப் பார்த்திருக்கிறார் சரவணன் சந்திரன். இத்தொகுப்பைப் படிக்கையில், நூற்றாண்டு கால ஆலமரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிற பருந்தின் பார்வையிலிருந்து தப்பியோடும் எலியொன்றின் சித்திரம் மெல்ல மேலேறி வரக்கூடும். ஒருவகையில் பருந்தும் எலியும் ஒன்றே!
Reviews
There are no reviews yet.