Description
இந்திரஜித்தின் ‘ஞானக்கூத்தன்’ நாவல் சுதந்திரத்திற்கு முன்பு சிங்கப்பூருக்கு பிழைப்பிற்காகச் சென்ற ஓர் இளைஞனின் கதையைப் பேசுகிறது. வீட்டைவிட்டு ஓடிப்போகிற, ஒருபோதும் வீடு திரும்ப முடியாத ஒரு மகனின் கதையைப் பேசுகிறது. சிங்கப்பூர்- மலேசிய நாடுகளில் பிழைப்பைத்தேடிச் சென்ற தமிழர்களின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்த நாவல் காட்டுகிறது. அந்நிய நிலத்தில் ஓர் இளைஞனின் சமூகக் கலாச்சார அந்தர நிலை, உதிரி மனிதர்களின் சமூகத்தில் ஒரு உதிரியாக தன்னை தக்கவைத்துக் கொள்ள நடத்தும் போராட்டம், மனித உறவுகள், அன்பு, காதல், நம்பிக்கைகளின் தற்காலிகத் தன்மை, கண்முன் அழிந்து போகும் பற்றுக்கோடுகள், அழிவின் பள்ளத்தாக்குகளில் தொடர்ந்து சரியும் மனிதர்கள், ஒட்டுமொத்த வாழ்வின் மீட்சியற்ற அபத்த நிலை என பல்வேறு அடுக்குகளாக விரிகிறது இந்த நாவல்.
– மனுஷ்ய புத்திரன்
(முன்னுரையிலிருந்து)
Reviews
There are no reviews yet.