COMMENTARIES ON SANGAM LITERATURE BY SUJATHA – SPECIAL OFFER

சுஜாதா

1,300.00

திருக்குறள் புதிய உரை
₹200.00

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
₹350.00

புறநானூறு ஓர் எளிய அறிமுகம்
₹490.00

401 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்)
₹260.00

 

Category:

Description

திருக்குறள் புதிய உரை

திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப் பெற்றுவந்திருக்கும் இந்த நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது.

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்

பாரதி ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-‘லாஸ்ட் டச் வித் டமில் யார்’-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது தேவை என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்நூல். சிலப்பதிகாரத்தைப் படித்தபோது எனக்கு மிஞ்சிய ஒரு மகா வியப்பு. அதன் காலத்தைக் கடந்த நவீனம், Contemporaneity இன்றும் புதிதாக இருக்கும் கதையும் கதை சொல்லும் முறையும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடிந்தால் இந்த எளிய உரையின் பயன் கிட்டியதாகச் சொல்வேன்.

புறநானூறு ஓர் எளிய அறிமுகம்

தமிழின் பழம்​பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்​றைப் பண்டித ​மொழியின் த​டைக​ளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் கொண்ட சுஜாதாவின் விளக்க உரை கால இடைவெளிகளைத் தாண்டி இந்நூலுடன் வாசகனை உறவாடச் செய்கிறது.

401 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்)

தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்ளன.ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல் கண்ணீரும் வியர்வையும் பிரிவும் பரிவும் துரோகமும் நட்பும் காதலும் கொண்ட நவ கவிதைகளாகப் பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள். இப்படிப் பார்க்கும்போது இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்பது புரியும்.

Additional information

Weight 1.5 kg
Dimensions 25 × 15 × 15 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “COMMENTARIES ON SANGAM LITERATURE BY SUJATHA – SPECIAL OFFER”

Your email address will not be published.