அஜ்வா

சரவணன் சந்திரன்

180.00

இலட்சியவாதத்திற்கும் அவநம்பிக்கைக்கும் இடையே வாழ்க்கையை ஒரு சாகசமாகக் காணும் மனிதர்களின் கதைதான் அஜ்வா. அஜ்வா என்பது நம்பிக்கையின் மீளுதலின் அடையாளம். இங்கே மீட்சிக்காகத் தவிக்கும் மனிதர்ள் நாவல் முழுக்க நிரம்புகிறார்கள்.

Description

இலட்சியவாதத்திற்கும் அவநம்பிக்கைக்கும் இடையே வாழ்க்கையை ஒரு சாகசமாகக் காணும் மனிதர்களின் கதைதான் அஜ்வா. இந்த சாகசங்களுக்கு திட்டவட்டமான இலக்குகள் இல்லை. தன்னையே பணயம் வைத்து ஆடும் சூதாட்டங்களில் பிறக்கும் மனக்கிளர்ச்சி அது. இந்த மனக்கிளர்ச்சி எப்போதும் சீக்கிரமே தன் எல்லைகளை அடைந்துவிடும். அந்த எல்லைகளை மேலும் விஸ்தரிக்காவிட்டால் உயிர்வாழ முடியாது. அப்படி விஸ்தரிக்கும் முயற்சியில் பொருளீட்டல், பயணங்கள், அதிகார வேட்கை, புகழாசை என எத்தனையோ வழிமுறைகள் உருவாகின்றன. அவற்றில் ஒன்றுதான் லாகிரிகளுக்கு அடிமைப்படுதல். அதன் அதிஉயர மலைமுகடுகளுக்குச் சென்று கீழே மீள முடியாத வீழ்ச்சியின் பள்ளத்தாக்குகளை உற்றுப் பார்ப்பவர்களின் உலகத்தை எழுதிச் செல்கிறார் சரவணன் சந்திரன்.
அஜ்வா என்பது நம்பிக்கையின் மீளுதலின் அடையாளம். இங்கே மீட்சிக்காகத் தவிக்கும் மனிதர்ள் நாவல் முழுக்க நிரம்புகிறார்கள்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.