Description
சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. மாறுபட்ட 360 டிகிரி கோணத்தில் இந்தச் சம காலத்தைச் சுழற்றிப் பார்க்கும் இந்தத் தொகுப்பு, முன்முடிவுகளோடு விஷயங்களை அணுகாமல் புரிந்துகொள்ள விழைகிறது.
கட்டுரைகள் என்றாலே இப்படித்தான் அமையவேண்டும் என்கிற விதிகளை உடைத்து மனிதர்களது வாழ்க்கைகளின் வழியாகப் பெரும் அரசியல் திரட்சிகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
அனுபவங்களை முன்னிறுத்தும் இக்கட்டுரைகள் வாசிப்பு இன்பத்தை மட்டுமல்லாமல், புதிய தெறிப்புகளையும் வாசிப்பவர்களுக்கு வழங்கும் விதத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன.
கனவுலகத்தில் சஞ்சரிப்பவர்களின் கைகளை இழுத்துப் பிடித்து அருகில் அமர்த்திவைத்து ரத்தமும் சதையுமான மனிதர்கள் புழங்கும் துறைகள் குறித்து மெல்லக் காதில் ஒதுகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.








Reviews
There are no reviews yet.