Description
எஸ்.செந்தில்குமாரின் பெரும்பாலான கதைகள் எங்கோ தொடங்கி எங்கோ முடியும் கதைகளாக இருக்கின்றன. ஆனாலும் அதில் சித்தரிக்கப்படும் ஒவ்வொரு காட்சிகளும் ஏதேனும் ஒரு மையசரட்டில் கோர்க்கப்பட்ட மணிகள் போன்றவை. கதை முடியும்போது அது அலங்கார மாலை போலாகிவிடுகிறது. கதை தொடங்கும் முதல் வரியிலேயே கதையுள்ளே வாசகரை இழுத்துக் கொண்டு இறுதிவரை அவர்களை கவனம் சிதறி போகாமல் கதையுள்ளே உலவ விடும் சொல்முறை. அந்தச் சொல்முறையே அவரின் கதைகளில் பிசிறுகளை பிசிறுகளாக காட்டாமல் அவை ஒரு புடவையின் பூ வேலைப்பாடு போல தோற்றமளிக்கச் செய்கின்றன.
Reviews
There are no reviews yet.