Description
ஒரு யுகத்தின் கனத்தோடு நெடிந்து உயர்ந்திருக்கிறது ஊருக்கு வெளியே ஒரு பருத்த மரம் சருகுகள் நகர்த்தும் காற்றின் வேகத்தில் நசுங்கிய கொலுசு மணியின் ஓசை கேட்கிறது கிளைத்துப் படர்ந்திருந்த அம்மரத்தில் கருத்த வவ்வாலாய் தொங்கிக் கொண்டிருக்கிறது ஒரு நாடோடிப் பாடல் ஆதிக்கிழவியின் புலம்பலென தாழ்குரல் ஒப்பாரியாய் சுழன்று வீசுகிறது இருதிசைக் காற்று இரவெல்லாம் கூடமர்ந்து கதைகேட்கும் பறவைகள் கதியின் சீரணத்தை வெளிகளில் எச்சமிடுகின்றன சன்னதம் வந்தாடும் விரிககூந்தல் பெண்ணாய் சுழன்று அழுகிறது அது கூதலின் மொழியில் பெயர்க்க இயலாத உண்மைகளின் மேல் வேர்பரத்தி துயரத்தின் சாட்சியாய் தேசமெங்கும் பெருமரங்கள்.
Reviews
There are no reviews yet.