Description
ஒரு சிறுகதையென்பதற்கான இலக்கணம் ஏதும் இருக்கிறதா என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை. வாசித்து முடிக்கையில் இந்த பெரும் வாழ்வின் சிறு விள்ளலை நம்முன் நிறுத்தி, அதன் ஏதோ ஒரு நினைவை அசை போட வைத்து, ஏதோ ஒரு சிறு கதையை, அது தரும் இலக்கியத்தின் ஒரு பகுதியை நினைவு படுத்திச் சென்றால் போதுமெனத் தோன்றுகிறது.
நான் முதல் முதலாய் நர்சிம்மின் கதைகளை வாசிக்கிறேன். எப்படி இவ்வளவு நாட்கள் இவரைத் தவறவிட்டேன் என மனம் கூசுகிறது. என்னவொரு இயல்பான மொழியும், வட்டார வழக்கும், கதை சொல்லும் நேர்த்தியும், அதை இதயத்தின் அடியாழத்தில் தக்க வைக்கச் சொல்லும் யாசிப்பும், அதன் தார்மீக நியாயமும் அடடா… நண்பரே பெருமிதப்பட்டுக் கொள்ளலாம்.
சிறுகல் என்ற கதையில் வழக்கமாக போராட்டங்களில் விட்டெறியப்படும் ஒரு கல் ஒரு மனிதனை எப்படி தரைமட்டமாக்கி படுக்க வைத்து மரணப்பட வைக்கிறது என்பதாக போகிறது.
கொடுப்பினை கதையில் வரும் குழந்தையை ஏந்தின ஓவியம் மாதிரியான அத்தையின் உருவத்தை காணமுடியாதபடி கண்ணில் நீர் முட்டுகிறது. இருபது வயதில் அப்பாவை இழந்து என் அம்மா பட்ட துயரம் நெஞ்சில் மோத விம்மி உடைகிறது மனசு. பூசணிப்பூவும் அதை அழித்து அந்த இடத்தில் போர்போட சித்தப்பா தன் முயற்சியில் வெற்றி பெறுவதும், தண்ணீர் இல்லாத சிரமத்தில் அப்பா கிணற்றிடம் தோற்று, ஒன்றும் செய்ய முடியாமல் அதை ஏற்றுக் கொள்வதும் யதார்த்தமான வாழ்வின் பதிவு.
-கே.வி.ஷைலஜா
Reviews
There are no reviews yet.