Description
1. அமேசான் காடும் சில பேரழகிகளும்
உயிர்மை, விகடன் , அந்திமழை பத்திரிக்கைகளில் வெளியான செறிவான கட்டுரைகளின் தொகுப்பு இது. தொகுப்பில் உள்ள பதிமூன்று கட்டுரைகளும் அரசியல் , ரபேல் ஊழல் , கல்வி , பொது மருத்துவம் ,மது, காப்பீட்டுத்துறை , சமூக ஊடகங்களின் அரசியல்,சென்னைபெருவெள்ளம் , மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற பல்வேறு தளங்களை போதுமான தரவுகளுடன் விரிவாக தொட்டுப்பேசுகிறது. மாற்றுப்பார்வைகளை முன்வைக்கும் இந்தக்கட்டுரைகளில் ஒலிக்கும் குரலும், தர்க்க நியாயங்களும் சமகாலத்தில் தவிர்க்கமுடியாதவை.
2. மனுஷனுக்கு ஆயிரம் பிரச்சினை
வரலாற்றில் முன்னெப்போதையும் விட சமகாலம்தான் மிகுந்த சிக்கலாக அன்றாடம் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஆயிரம் பிரச்சினைகளை கொண்டுவரும் காலமாக இருக்கிறது. சமகால அபத்தங்கள் , நிகழ்வுகள் , அரசியல் , கலை , இலக்கியம் பற்றிய ஒரு சாமானியனின் முகநூல் பகடி பதிவுகள் இவை. இதில் சில பதிவுகள் முகநூல் தாண்டியும் வைரலாகி பேசப்பட்டவை. அன்றாட பேஸ்புக் ஜல்லிபோல இல்லாமல் எப்போதும் கவனம்பெறும் பொதுவிஷயங்களை கருப்பொருளாக கொண்டு எழுதப்பட்ட முகநூல் பதிவுகளின் தொகுப்பு இது
Reviews
There are no reviews yet.