Description
இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான ‘டவுன் லோடிங்’ என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு மாற்றிப் புகட்ட முடியுமா என்று பலர் வியந்து இதுசாத்தியமே இல்லை என்றார்கள். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி நிலையில் இது சாத்தியமில்லைதான். ஆனால் இன்று அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளின் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில் ‘செயற்கை அறிவு’ என்ற இயலின் ஒரு பிரிவாக இத்தகைய மூளைச் செய்தி மாற்றும் ஆராய்ச்சிகள் செய்து சிறிதளவு வெற்றி கண்டும் இருக்கிறார்கள். இந்த வெற்றியின் ஒரு கற்பனை விரிவாக்கம்தான் ‘பேசும் பொம்மைகள்’.
Reviews
There are no reviews yet.