Description
இவரது கவிதை உலகம் காடும், காடு சார்ந்த வாழ்க்கையின் பரவச நிலைகளையும், கற்பனை விந்தையோடு கூடிய அனுபவங்களையும், ஆண் பெண் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களையும் பேசிச் செல்கிறபோது வாழ்தலின் ஆற்றாமையைப் Lறந்தள்ளி, முகத்துக்கு நேராக எதிர் கொண்டு அல: தக் கடந்தும் சென்று அர்த்தங்களைப் பிழிந்தெடுக்கும் செயல்பாட்டில் இறங்கி விடுகிறது. நிறைவேறாத காதலின் மையமாகவும், காலத்தின் புதிர்த்தன்மையை கண்ணாமூச்சித் தனமாக எதிர்கொள்ளும் செயலாகவும் இருக்கும் துயரம் இவரது கவிதை உலகின் ஒரு மெல்லிய பின்னணி இசையாக பரிமளிக்கிறது. இந்தத் துயரத்திலிருந்து தப்பித்து அடைக்கலம் புகும் ஒரு அன்னை மடியாக இயற்கை இவர், கவிதைகளில் ஒரு இடத்தைப் பிடிக்கிறது.
Reviews
There are no reviews yet.