Description
சமீப கால உலக வரலாற்றில் 2011ஆம் ஆண்டு துவங்கி நடந்துவரும் போராட்டங்கள் முக்கியமானவை. ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் உலகெங்கும் பல நாடுகளில் அலை அலையாக எழுந்த இந்தப் போராட்டங்கள் பல நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு முடிவு கட்டியதுடன் புதிய அரசியல் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன. அரேபிய வசந்தம், வால் ஸ்ட்ரீடிற்கு எதிரான போராட்டங்கள், சோவியத்துக்குப் பிந்திய உலகின் மாற்றங்கள், மீண்டும் ஒரு பனிப்போரின் துவக்கம், உலக இடதுசாரி இயக்கங்களின் இன்றைய நிலை, பல ஸ்தீனப் போராட்டத்தின் அடிப்படை நியாயங்கள், இந்திய-சீனப் பிரச்சனையில் நம் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட உண்மைகள், அண்டை நாடுகளுடனான நம் உறவின் விரிசலின் காரணங்கள் எனச் சமகால உலகைத் தன் கூரிய பார்வையின் ஊடாக அலசுகிறார் அ.மார்க்ஸ்.
Reviews
There are no reviews yet.