Sale!

சி.சரவணகார்த்திகேயனின் இரு புதிய நூல்கள்

சி.சரவணகார்த்திகேயன்

430.00 350.00

1. கிருமி

2. 69

In stock

Description

1. கிருமி – உலகம் யாவையும் கொடுங்கிருமி கண்டுழன்ற இருண்மைக் காலத்தில் புனையப்பட்ட பத்து மிக நீண்ட சிறுகதைகளின் கொத்து இப்புத்தகம். அந்த ஊடரங்கு தினங்களின் மந்தாரத்தையும் மன அழுத்தத்தையும் இவற்றின் பாத்திரங்கள் ஏந்தி நிற்கின்றன. சமூகம், வரலாறு, புராணம், விஞ்ஞானம், தத்துவம் எனப் பல நிறம் பூசியவை எனினும் இவற்றின் மைய நரம்பில் மறவாமல் காமத்தின் நறுமணம் கமழ்கிறது. சொல்லப்படாத புத்துலகம் அத்தனையிலும் திறக்கிறது. எல்லாக் கதைகளிலும் தவறாமல் நல்லவர்கள் நாசமாகிறார்கள். எல்லாவற்றின் இறுதியிலும் வாசகன் மனம் சற்று நேரம் அதிர்கிறது.

2. 69 – 69 பற்றி ‘காகத்தின் கலவிநிலை’ என வாத்ஸாயனர் சொல்கிறார். கீழ்மைச்செயல் என்ற தொனியில். கழிவுறுப்பில் இன்பம் ஊற்றெடுப்பது போல் கீழ்மையிலிருந்துதான் கலை முழைத்தெழுகிறது. இந்நூலை அத்திசையில் வைக்கலாம். துல்லியமாய் 100 சொல்லில் அடைத்த 69 நூண்கதைகள் இவை. ஒரு வாரத்தில் எழுதப்பட்டவை. பாலின முரண்களை, உறவுச் சிடுக்குகளை, கலாசார மீறல்களை, இச்சையின் அரசியலை பிரதிபலிக்கும் இக்கதைகளில் விதவிதமான, வினோதமான ஆண்களும் பெண்டிரும் உலவுகிறார்கள். மாவிலிருந்து மது நொதிப்பது போல், அவர்களுக்குள் காதலிலிருந்து காமம் கசிகிறது. அவற்றில் எது நீங்கள், எது நான் என ரகசிய அடையாளங்காண்பது சுவாரஸ்ய ஆட்டம்.

Additional information

Weight 0.30 kg
Dimensions 100 × 140 × 215 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “சி.சரவணகார்த்திகேயனின் இரு புதிய நூல்கள்”

Your email address will not be published. Required fields are marked *