முனைவர் இரா.சின்னசாமி

முனைவர் இரா. சின்னசாமி, இ.கா.ப. (1963)

கோவை மாவட்டத்தில் சிறுவாணி அடிவாரம், புள்ளாக்கவுண்டன் புதூர் என்ற ஊரில் அகவை முதிர்ந்த தமிழறிஞர். பொ.வெற்றிவேலன் – இராசம்மாள் தம்பதியருக்கு தலைமகனாகப் பிறந்த இரா. சின்னசாமி, புவியியல் மற்றும் சட்டவியலில் இளங்கலைப் பட்டங்களும், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியலில் முதுகலைப்பட்டங்களும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் “தமிழகத்தில் சாதிப்பூசல்கள் நேர்வுகளும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.

1986ஆம் ஆண்டு தனது 22வது வயதில் அரசுப் பணியினைத் தொடங்கி, கூட்டுறவுத் துறை, தலைமைச் செயலகம் (10 ஆண்டுகள்). பதிவுத் துறையில் சார்பதிவாளர், தொழிலாளர் துறையில் தொழிலாளர் ஆய்வாளர் (2 ஆண்டுகள்) ஆகவும் பணிபுரிந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1-ன் மூலம் நேரடியாகக் காவல் துணைக் கண்காணிப்பாளராக 1998இல் தேர்ந்தெடுக்கப்பட்டு வள்ளியூர், பண்ருட்டி, கடலூர், பாளையங்கோட்டை, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பணிபுரிந்து காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சேலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.

இவை தவிர மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவிலும், மாநிலக் காவல் பயிற்சிப் பிரிவிலும், இரயில்வே காவல் பிரிவிலும் பணிபுரிந்த அனுபவமும் உண்டு.

மணிமுத்தாறு.த.சி.கா. 12ஆம் அணியின் தளவாயாகப் பணிபுரிந்துள்ளார்.

2017ஆம் ஆண்டிலிருந்து காவல் கண்காணிப்பாளராகவும்

2021ஆம் ஆண்டு முதல் காவல்துறை துணைத் தலைவராகவும். தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தில் பணியாற்றிவருகிறார் சங்க இலக்கியம் மற்றும் 20ஆம் நூற்றாண்டு இலக்கியங்களில் தொடர்ந்த பயிற்சியின் மூலம் நவீன கவிதை குறித்து தனக்கென ஒரு கருத்தாக்கத்தைக் கொண்டு எழுதி வரும் இவரது கவிதைகள் தற்போதுள்ள ஏறக்குறைய அனைத்து சிற்றிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும் ‘ஆயல்’ என்ற இலக்கிய அமைப்பினை நடத்திக்கொண்டு நவீன இலக்கிய படைப்பாளிகளோடும் தமிழ்ச் சிந்தனையாளர்களோடும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். இது இவரது முழுமையான கவிதைத் தொகுப்பு.

Showing the single result

Showing the single result