Description
இது யாருடைய பை, இது யாருடைய சாவி எனக் கூட்டத்தில் ஒருவன் கேட்பதைப் போல, இது யாருடைய வாழ்க்கை? யாருடைய வாழ்க்கை ? என எல்லோரையும் பார்த்துக் கேட்கும் குரல் இந்தக் கவிதைகளின் மத்தியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மனித வாழ்வின் அபத்தங்களை வெறுமனே அபத்தமாக வைக்காமல் அதை நகையுணர்வோடு சொல்லி நகர்கின்றன.
மொத்தக் கவிதைகளையும் வாசித்துப் பார்த்த போது நடந்தே சில நூறு மைல்கள் கடந்து, ஒரு மலையை, ஒரு பூவை, ஒரு சிதைந்த வீட்டைக் கண்டு துயருடன் பேசும் ஒரு நாடோடியின் அலைச்சலை அர்ஜுன்ராஜின் கவிதைகள் வெளிப்படுத்த துடிப்பது தெரிகிறது.
ச.துரை








Reviews
There are no reviews yet.