Description
காதலில் மனிதன் மிருதுவடைந்து விடுகிறான். கருணையும் தாச பாவமும் மிகுந்து ஒருவித குழைவும் நெகிழ்வுத் தன்மையும் நோன்றி விடுகிறது. வேட்கையும் மூர்க்கமும் உள்ளே கனன்றாலும் பிடித்த பெண்ணின் தன்னை மேன்மையானவனாக பிரஸ்தாபித்துக் கொள்ள விழைகிறான். அதில் ஒரு வேட்டை மிருகத்தின் அமைதியும் கவனமும் கூர்மையும் ஒரு பாசாங்காகவேனும் அமைந்து கிடக்கும். சமயங்களில் உப்பு ஒரு பண்டத்தின் இயல்பை மாற்றி விடுகிற மாதிரி காதல் ஒருவரது தன்னிலையை முற்றிலும் மாற்றி விடுகின்றது. ஒரு டால்பினைப் போல கடலில் தொலைந்தவர்களுக்கு வழிகாட்டுகிற, காப்பாற்றுகிற, கீச்சொலி பேசும் டால்பின்கள் உறங்கும் போது ஒரு கண்ணை மட்டும் முடி உறங்குமாம் அப்போது ஒரு பக்கத்து மூளை மட்டும் உறங்கும் மறு கண் மூடும் போது மறு பக்கத்து மூளை, இப்படி ஒரு தகவலை வாசித்ததும் காதலும் அப்படித்தான் என்று ஒரு இணக்கம் தோன்றிற்று.
Reviews
There are no reviews yet.